• Latest News

    Powered by Blogger.
    Tuesday, 9 April 2019

    குறுகிய கால இன்கம் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு மாறுவதற்கு சிறந்த நேரமா?


    குறுகிய கால இன்கம் ஃபண்ட்களுக்கு மாறுவதற்கு சிறந்த நேரம்..!

    வட்டி விகிதத்தை பாரத ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ), மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் போது முதலீட்டாளர்கள் அதிக வருமானத்தை பெற குறுகிய கால இன்கம் ஃபண்ட்களை (Short term income funds) முதலீட்டுக்கு கவனிப்பார்கள். இந்த ஃபண்ட்களின் முதிர்வு காலம் (Duration) குறைவாக இருப்பதால் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

    இது போன்ற ஒரு ஃபண்ட்தான் யூ.டி.ஐ  ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட் (UTI Short Term Income Fund).  இந்த ஃபண்ட் குறைவான இடர்ப்பாடு மற்றும்  எளிதில் பணமாக்க கூடிய தன்மை, (Low risk and high liquidity) நியாயமான வருமானம் ஈட்டும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதியானது, நிதிச் சந்தை ஆவணங்கள் (Money market securities) மற்றும் உயர்தரக்குறியீடு பெற்ற கடன் பத்திரங்களை (High quality of debt) கொண்ட முதலீட்டுக் கலவையாக (Portfolio) இருக்கிறதுஇந்தக் கடன் பத்திரங்களின் சராசரி முதிர்வு காலம் என்பது  4 ஆண்டுகளாக இருக்கும். இந்த ஃபண்ட்,  உயர் கடன் தரம் (High credit quality) மற்றும் பரவலான முதலீட்டுக் கலவையை (Portfolio diversification) கொண்டிருக்கும்.

    யூ.டி.ஐ ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட்-ன் நிதி மேலாளர் சுதிர்  அகர்வால் (Sudhir Agrawal, fund manager of UTI Short Term Income Fund)  கூறும் போது"ரிசர்வ் வங்கி, கடந்த சில மாதங்களில் வட்டி விகிதத்தை 0.5% குறைத்திருக்கிறது. அந்த வகையில் குறுகிய காலத்தில் மேலும் வட்டியை குறைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் நுகர்வோர் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் வட்டி விகிதத்தை இன்னும் குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை. பணப்புழக்கத்தை சுலபமாக வைத்திருப்போம் என ஆர்.பி.ஐ வாக்குறுதி கொடுத்திருப்பதால் குறுகிய காலத்தில், ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட்களில் வருமான வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இந்த நிலையில், குறைவான ஏற்ற இறக்கத்தில் அதிக வருமானத்தை அளிக்க கூடிய ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட்களில் முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடர வேண்டும். நாங்கள் எங்களின் ஷார்ட் டேர்ம் இன்கம்  ஃபண்டில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்கிறோம்.

    அடுத்த 3-6 மாதங்களில் முதலீடுகளை எளிதில் பணமாக்கும் சூழ்நிலை (Liquidity situation) மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ஃபண்ட்-ன் வருமானம் (Income) அதிகரிப்பதோடு, மூலதன ஆதாயமும் (Capital gain) அதிகரிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் தாராளமாக இந்த ஃபண்ட்-ஐ முதலீட்டுக்கு தேர்வு செய்யலாம்.  என்றார்.

    யூ.டி.ஐ ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட், அதன் பெஞ்ச்மார்க் குறியீடான க்ரைசில் ஷார்ட் டேர்ம் பாண்ட் ஃபண்ட் இண்டெக்ஸ் (CRISIL Short-Term Bond Fund Index) - விட தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது

    இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் (2019  மார்ச் 31 நிலவரப்படி) 8.58% வருமானம் தந்துள்ளது. இதே காலகட்டத்தில் பெஞ்ச்மார்க் வருமானம் 7.76% ஆக  இருக்கிறது.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குறுகிய கால இன்கம் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு மாறுவதற்கு சிறந்த நேரமா? Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top