• Latest News

    Powered by Blogger.
    Thursday, 15 November 2018

    ஐசிஐசிஐ பேங்க், டெபாசிட் வட்டி 0.25% உயர்வு


    ஐசிஐசிஐ பேங்க், டெபாசிட் வட்டி 0.25% உயர்வு. 

    ·     2  ஆண்டுகளுக்கு மேல் 3 ஆண்டுகள் வரையிலான குறித்த கால டெபாசிட்களுக்கு 7.50%  சலுகை வட்டி

    மும்பை: ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) இன்று ரூ. 1 கோடிக்கு குறைவான குறித்த கால டெபாசிட்களுக்கு (term-deposits) வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் (basis points), அதாவது 0.25% அதிகரித்தது. இந்த வட்டி உயர்வு, அனைத்து குறித்த கால உள்நாட்டு டெபாசிட்களுக்கு நவம்பர் 15, 2018 முதல் அமல்படுத்தப்படுகிறது. இது என்ஆர்ஓ (Non Resident Ordinary  - NRO) மற்றும் என்ஆர்இ (Non Resident External - NRE) குறித்த கால டெபாசிட்களுக்கும் பொருந்தும்.

    இந்த வட்டி அதிகரிப்பை அடுத்து, இந்த வட்டி மிக அதிகமாக, 2  ஆண்டுகளுக்கு மேல் 3 ஆண்டுகள் வரையிலான குறித்த கால டெபாசிட்களுக்கு 7.50%  வட்டி வழங்குகிறது.

    பிரணவ் மிஸ்ரா, மூத்த பொது மேலாளர் & தலைவர் - சில்லறை பொறுப்புகள் குழு (Pranav Mishra, Senior General Manager & Head – Retail Liabilities Group) கூறும் போது,''நிதிச் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக, உறுதியான அதிக வருமானம் கிடைக்கும் விதமாக வட்டியை அதிகரித்துள்ளோம். 2  முதல்  3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த கால டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 7.50%  அதிக வட்டி (மூத்தக் குடிமக்களுக்கு ஆண்டுக்கு 8.00%) கிடைக்கும். துணிச்சலான சொத்து ஒதுக்கீடு உத்தியாக (asset allocation strategy), வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை நிச்சயமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்"


    ஐசிஐசிஐ பேங்க், பல்வேறு முதிர்வு காலம் குறிப்பாக 7 நாள்கள் முதல் 10 ஆன்டுகள் வரைக்கும் குறித்த கால டெபாசிட்களை அளித்து வருகிறது. அனைத்து குறித்த கால டெபாசிட்களுக்கும் அனைத்து முதிர்வு காலத்துக்கும் மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளைகள் அதாவது 0.5% கூடுதல் வட்டி வழங்குகிறது.

    வாடிக்கையாளர்கள் வங்கியின் எந்தக் கிளையிலும் குறித்த கால டெபாசிட் தொடங்கலாம். இது தவிர வாடிக்கையாளர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப அவர்களின் வீடு / அலுவலகம், வங்கி இணைய தளம் மற்றும் மொபைல் வங்கி சேவை, ஏடிஎம் மையங்கள் மூலமும் முதலீடு செய்யலாம்.

    2018, நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய குறித்த கால டெபாசிட் வட்டி விகிதம் வருமாறு:

    முதிர்வு காலம்



    வட்டி விகிதம் (ஆண்டுக்கு)
    ரூ. 1 கோடிக்கு குறைவான குறித்த கால டெபாசிட்கள்
    புதிய வட்டி விகிதம் நவ. 15 முதல்
    அதிகரிக்கப்பட்ட அடிப்படை புள்ளிகள்
    7 நாள்கள் முதல் 14 நாள்கள்
    4.00%
    -
    15 நாள்கள் முதல் 29 நாள்கள்
    4.25%
    -
    30 நாள்கள் முதல் 45 நாள்கள்
    5.50%
    -
    46 நாள்கள் முதல் 60 நாள்கள்
    6.00%
    25 அடிப்படை புள்ளிகள்
    61 நாள்கள் முதல் 90 நாள்கள்
    6.25%
    25 அடிப்படை புள்ளிகள்
     91 நாள்கள் முதல் 120 நாள்கள்
    6.25%
    25 அடிப்படை புள்ளிகள்
    121 நாள்கள் முதல் 184 நாள்கள்
    6.25%
    25 அடிப்படை புள்ளிகள்
    185 நாள்கள் முதல் 289 நாள்கள்
    6.50%
    -
    290 நாள்கள் முதல் ஓராண்டுக்குள்
    6.75%
    -
    ஓராண்டு முதல் 389 நாள்கள்
    6.90%
    15 அடிப்படை புள்ளிகள்
     390 நாள்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை 
    7.10%
    10 அடிப்படை புள்ளிகள்
    இரண்டு ஆண்டுகள் 1 நாள் முதல் மூன்று  ஆண்டுகள் வரை
    7.50%
    25 அடிப்படை புள்ளிகள்
    மூன்று ஆண்டுகள் 1 நாள் முதல் ஐந்து   ஆண்டுகள் வரை
    7.25%
    -
     ஐந்து ஆண்டுகள் 1 நாள் முதல் 10   ஆண்டுகள் வரை
    7.00%
    -
    ஐந்து ஆண்டுகள்  (80சி எஃப்டி)
    7.25%
    -

    * என்ஆர்இ விகிதங்கள்  ஓராண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட முதிர்வு காலங்களுக்கு மட்டும்.

    செய்திகள் மற்றும் புதிய விஷயங்களுக்கு பார்வையிடவும் மற்றும் பின் தொடரவும் Twitter at 1b33ThUIDnBXVVX945tWiZ-aHENBlbaK162qeU1LP0XzjBKip-wxMA_duT5abrvCB3zJqwCH6yMRCE3IXbf_NnsX7NEefWUmjxgczHw37HcG_E90_eDoygbqBNtWiTQ1MzRDY7ckTOU4Qdm6wZp6v3h4lB4iFPp42DuTJnM45oDqWDNF1ewTdi0tUAdJbUPcKFfrc5bNNr6-_D9VtW5qHjY_hYfQh5DXSSS1PvJVdf5a6WL8ccGSnU_RwZaDTcZN8ffy6PDeI5SYN1LsEoJrkydbqq-5vAP1n-Zd0sWbE6266NAUO--cbAO5S1opOgnyvTb5xj7-fdPRNr-2Xu7UWPw/http%3A%2F%2Fwww.twitter.com%2FICICIBank"www.twitter.com/ICICIBank

    பத்திரிகை தொடர்புகளுக்கு  write to: corporate.communications@icicibank.com


    .

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐசிஐசிஐ பேங்க், டெபாசிட் வட்டி 0.25% உயர்வு Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top