• Latest News

    Powered by Blogger.
    Wednesday, 3 October 2018

    எல்ஐசி ஜீவன் சாந்தி பாலிசி உத்தரவாதம் அளிக்கும் பென்ஷன் பிளான்


     எல்ஐசி ஜீவன் சாந்தி பாலிசி


    இன்றைய சூழலில், நிதி மேலாண்மை மற்றும் சிக்கல்களை சமாளிக்கவும், இளைஞர்கள் நிலையான வருமானத்தை பெறவும், எல்..சி., சார்பில், 'ஜீவன் சாந்தி' எனும் ஒற்றை தவணைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    பங்குச் சந்தையுடன்  இணைக்கப்படாத, லாபத்தில் பங்கேற்காத ஒரே ஒரு முறை பிரீமியம் செலுத்தும் ஆண்டளிப்பு தொகை (ஆன்யூட்டி) என்பது இந்தப் பாலிசியின் திட்டமாகும்.

    ஆன்யுட்டி தொகையை உடனடியாகவோ அல்லது குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகோ (1 முதல் 20 ஆண்டுகள்)  பெறும் வகையில் பாலிசிதாரர் தேர்வு செய்து கொள்ள முடியும்

    இதில், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், தனி நபராகவோ, நெருங்கிய உறவினருடன் இணைந்தோ (தந்தை / மகள்)  அல்லது மாற்றுத்திறனாளிகளின் பயனுக்காகவோ இந்தத் திட்டத்தில் சேரலாம்.

    இதில், செலுத்தப்படும் தொகை, அதனால் வரும் வருமானம் இரண்டுமே பாலிசி துவங்கும் அன்றே தீர்மானிக்கப்படுவதால், நிரந்தர வருமானம் வாழ்நாள் முழுமைக்கும் உறுதியளிக்கப்படுகிறது.

    பாலிசி எடுத்து ஓராண்டுக்கு பிறகு, பாலிசியின் மீது கடன் பெறும் வசதி உள்ளது.

    இந்த பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு 80சி பிரிவின் கீழ் நிதி ஆண்டில் ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகை இருக்கிறது. கிடைக்கும் பென்ஷன் பணத்துக்கு வரி வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டி வரும்.
    குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 1.5 லட்சம். குறைந்தபட்ச மாத பென்ஷன் ரூ. 1,500


    எல்ஐசி, புதிதாக அறிமுகப்படுத்திய ஜீவன் சாந்தி எனப்படும் ஆண்டளிப்பு (ஆன்யூட்டி) பாலிசி மூலம் ரூ.1,312.46 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதன் தென் மண்டல மேலாளர் தாமோதரன் கூறினார்.

    எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் சாந்தி பாலிசி திட்ட விளக்க நிகழ்ச்சி சென்னையில்  நடைபெற்றது.

    இதில் பங்கேற்று தாமோதரன் கூறியதாவது: தமிழகம் உள்பட நாடு முழுவதும் இந்தப் புதிய பாலிசி தொடங்கிய நாளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.30) வரை 31,235 பாலிசிகளின் மூலம் ரூ.1,312.46 கோடி கிடைத்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ரூ.17.11 கோடி பெற்று சென்னை கோட்டம்-1 முதலிடத்தில் உள்ளது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எல்ஐசி ஜீவன் சாந்தி பாலிசி உத்தரவாதம் அளிக்கும் பென்ஷன் பிளான் Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top