• Latest News

    Powered by Blogger.
    Saturday, 27 October 2018

    லஷ்மி விலாஸ் பேங்க் - 2018, செப்டம்பர் 30 காலாண்டு வணிகம் ரூ. 55,162 கோடி


    லஷ்மி விலாஸ் பேங்க் - 2018,  செப்டம்பர் 30 காலாண்டு வணிகம்  ரூ. 55,162 கோடி


    லஷ்மி விலாஸ் பேங்க் - 2018,  செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள் 

    வங்கியின் வணிகம்  ரூ. 2,775 கோடி (5.30%)  அதிகரித்து ரூ. .52,387 கோடியிலிருந்து ரூ. 55,162 கோடியாக உயர்ந்துள்ளது.

       காசா (CASA)  ரூ. 772 கோடி  அதிகரித்து ரூ. 6,118 கோடியிலிருந்து ரூ. 6,890 கோடியாக உயர்ந்துள்ளது. 2018,  செப்டம்பர் 30 -ல் காசா 22.18% ஆக உள்ளது.  2017,  செப்டம்பர் 30 -ல்  20.97% ஆக இருந்தது.

    2018,  செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் நிகர வட்டி வருமானம் (NII) ரூ.  21கோடி அதிகரித்து,   ரூ. 151 கோடியாக உள்ளது. இது 2017,  செப்டம்பர் 30 -ல் ரூ. 130 கோடியாக  இருந்தது.

    வங்கியின் நிகர வட்டி வரம்பு (NIM), 2018  செப்டம்பர் 30-ல் 1.74% ஆக உள்ளது. இது 2017 செப்டம்பர் 30 -ல் 1.48% ஆக இருந்தது.

    செயல்பாட்டு லாபம் காலாண்டில் ரூ. 27.57 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2018, ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ரூ. 6.76 கோடியாக இருந்தது.
    மூலதன தன்னிறைவு விகிதம் பேசல்  III படி, 9.45% லிருந்து  9.67% ஆக உயர்ந்துள்ளது.

    தென் மாநிலத்தை சேர்ந்த தனியார் துறை வங்கியான  லஷ்மி விலாஸ் பேங்க் (Lakshmi Vilas Bank - LVB), நடப்பு 2018-19 -ம்  நிதி ஆண்டில்  2018,  செப்டம்பர் 30 உடன் முடிந்த இரண்டாம்  காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

    முக்கிய நிதி நிலை முடிவுகள் :
    *
    வங்கியின் மொத்த வணிகம் 2018, செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 55,162 கோடியாக உள்ளது. இது 30% அதிகரிப்பு.

    *
    வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 23,216 கோடியிலிருந்து  ரூ. 24,092 கோடியாக அதிகரித்துள்ளது. இது  3.77%. உயர்வு

    *
    மொத்த டெபாசிட் 2017, செபடம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 29,171 கோடியாக இருந்தது. இது 2018, செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 31,071 கோடியாக உயர்துள்ளது. இது 6.51% உயர்வாகும்.

    *
    காசா (CASA) ரூ. 6, 118 கோடி அதிகரித்து ரூ. 6,890 கோடியாக உயர்ந்துள்ளதுஇது, 12.62% அதிகரிப்பாகும். மொத்த டெபாசிட்டில் காசாவின் பங்களிப்பு 20.97%லிருந்து 22.18% ஆக அதிகரித்துள்ளது.

    *
    இந்த வங்கி அதன் மொத்த டெபாசிட்களை  ரூ. 1,800 கோடி குறைத்துள்ளது. இதனால், டெபாசிட்களுக்கு வழங்கப்பட்ட வட்டி செலவு முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது ரூ.  22 கோடி குறைந்துள்ளது.   இதனை அடுத்து நிகர வட்டி வருமானம் (NII) 2018-19 ஆம் நிதி ஆண்டு இரண்டாம் காலாண்டில்  ரூ. 150.95 கோடியாக அதிகரித்துள்ளதுஇது, 2018-19 ஆம் நிதி ஆண்டு முதல்  காலாண்டில்  ரூ. 130.20 கோடியாக இருந்தது.

    *
    செலவு வருமான விகிதம், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது  96.46% லிருந்து 87.59% ஆக குறைந்துள்ளது.

    *
    வங்கியின் நிகர இழப்பு, 2018 செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் ரூ. 132.31 கோடியாக உள்ளது. இது 2018 ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ரூ. 123.87 கோடியாக  இருந்தது.

    *
    வங்கியின் வணிகம் தொடர்ந்து பரவலாக இருக்கிறது.

    மூலதன தன்னிறைவு விகிதம்:
    இந்த வங்கியின் மூலதன தன்னிறைவு விகிதம் ((CAR)) பேசல் விதிமுறை  III-ன் படி, 2018 ஜூன்  30 -ல்  9.45%  ஆக இருந்தது. இது 2018 செப்டம்பர் 30-ல்  9.67% ஆக உயர்ந்துள்ளது.

    வாராக் கடன் 
    2018
    செப்டம்பர் 30  நிலவரப்படிவங்கியின் மொத்த வாராக் கடன் 12.31% ஆக உள்ளது. இது 2017 செப்டம்பர் 30-ல்  5.50% ஆக இருந்தது.

    2017-18
    இரண்டாம்  காலாண்டில் வங்கியின் ஒதுக்கீட்டு கவரேஜ் விகிதம் ( Provision Coverage Ratio) 55.39% ஆக உள்ளது. இது 2017 செப்டம்பர் 30-ல் 46.27% ஆக இருந்தது. 2018 ஜூன் 30-ல் 55.80% ஆக உள்ளது

     
    சென்னையில்  2018, அக்டோபர் 24 அன்று நநடந்த லஷ்மி விலாஸ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் 2018 செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டு நிதி நிலை விவரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: லஷ்மி விலாஸ் பேங்க் - 2018, செப்டம்பர் 30 காலாண்டு வணிகம் ரூ. 55,162 கோடி Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top