• Latest News

    Powered by Blogger.
    Wednesday, 17 October 2018

    டிசிபி பேங்க், 2018-19 இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ.73 கோடி


    டிசிபி பேங்க், 2018-19 இரண்டாம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் அறிவிப்பு

    டிசிபி பேங்க், 2018-19 இரண்டாம் காலாண்டு  நிகர லாபம் ரூ.73  கோடி

    அக்டோபர் 17, 2018, மும்பை: டிசிபி பேங்க் லிமிடெட் (BSE: 532772; NSE: DCB)–ன் இயக்குநர் குழு கூட்டம் மும்பையில் 2018, அக்டோபர் 17 ம் தேதி நடந்தது. அதில், 2018-19 ஆம் நிதி ஆண்டு  இரண்டாம் காலாண்டு (Q2 FY 2019) நிதி நிலை முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.

    2018-19 இரண்டாம் காலாண்டு நிதி நிலை முக்கிய முடிவுகள் :

             2018-19 இரண்டாம் காலாண்டில் வங்கியின் வரிக்கு பிந்தைய லாபம் (Profit After Tax - நிகர லாபம்) ரூ.73  கோடி. இது 2017-18  இரண்டாம் காலாண்டில் ரூ. 59  கோடியாக இருந்தது. இது 25% அதிகரிப்பாகும்.

             2018-19 இரண்டாம் காலாண்டில் வங்கியின் வரிக்கு முந்தைய லாபம் (Profit Before Tax ) ரூ.114  கோடி. இது 2017-18 இரண்டாம் காலாண்டில் ரூ. 94 கோடியாக இருந்தது. இது 21% அதிகரிப்பாகும்.       
                                                                                        
              செயல்பாட்டு லாபம் ரூ. 146  கோடி, இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.124  கோடியாக இருந்தது.

             வங்கியின் நிகர வட்டி வருவாய் (Net Interest Income) ரூ. 282  கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ. 248 கோடியாக இருந்தது.  இது 17% அதிகரிப்பு.

             வட்டி சாரா வருமானம் ரூ.73  கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ. 65  கோடியாக இருந்தது  முக்கிய கட்டண வருமானம் 17% வளர்ச்சி கண்டுள்ளது.

            2018-19 முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது, செலவு வருமான விகிதம் (Cost Income Ratio) 1.38% அதிகரித்து 58.88% ஆக உள்ளது.

            பங்கு மூலதனம் மீதான வருமானம் (Return on Equity) ஆண்டு கணக்கில், 2018-19 இரண்டாம் காலாண்டில் 11.13%  ஆக உள்ளது. இது 2018-19 முதல் காலாண்டில் 10.75% ஆக இருந்தது. இது 2017-18 இரண்டாம் காலாண்டில் 9.78% ஆக இருந்தது. இது 21% அதிகரிப்பாகும். முந்தைய ஆண்டின் ஒரு தள்ளுபடி தவிர்த்து, செலவு வருமான விகிதம் மற்றும் பங்கு மூலதனம் மீதான வருமானம் முந்தைய ஆண்டு மற்றும் கடைசி காலாண்டுடன் ஒப்பிடும் போது மேம்பட்டுள்ளது.

                       வழங்கப்பட்ட நிகர கடன்கள் (Net Advances), 2018 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 22,069 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2017 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 17,395  கோடியாக இருந்தது. இது 27% வளர்ச்சியாகும்.

                       2018 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் டெபாசிட்கள் 27% வளர்ச்சிக் கண்டு ரூ. 26,169 கோடியாக உள்ளது. சில்லறை காசா மற்றும் சில்லறை டேர்ம் டெபாசிட்கள் தொடர்ந்து வங்கியின் நிலையான நிதி ஆதாரமாக இருக்கிறது. வங்கியின் மொத்த டெபாசிட்டில் சில்லறை டெபாசிட்கள் (வேளாண் மற்றும் அனைவருக்கும் வங்கி் சேவை சேர்த்து) 75.30%  ஆக உள்ளது. 

                        காசா விகிதம், 2018 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 24.30%  ஆக உள்ளது. இது, 2017 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 25.88% ஆக இருந்தது . சேமிப்பு கணக்குகளின் வளர்ச்சி 30% ஆகும்.

                       நிகர வட்டி வரம்பு (Net Interest Margin), 2018-19 இரண்டாம் காலாண்டில் 3.83% ஆக உள்ளது. இது 2017-18 இரண்டாம் காலாண்டில் 4.22%, இது 2018-19 முதல்  காலாண்டில் 3.90%  ஆக இருந்தது.

                       மொத்த  வாராக் கடன் (Gross NPA) விகிதம் செப்டம்பர் 30, 2018 நிலவரப்படி  1.84%  ஆக இருக்கிறது. இது, ஜூன் 30, 2018 நிலவரப்படி 1.86% ஆக இருந்தது

                         நிகர வாராக் கடன் விகிதம், செப்டம்பர் 30, 2018 நிலவரப்படி 0.72% ஆக குறைந்துள்ளது. இது, ஜூன் 30, 2018 நிலவரப்படி 0.72% ஆக இருந்தது.

                         மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio - CAR),  செப்டம்பர் 30, 2018 நிலவரப்படி  15.57%  ஆக உள்ளது. மேலும், பேசல் III விதிமுறைகள்படி  டயர் I - 12.02% மற்றும் டயர்  II - 3.55%  ஆக உள்ளது.

                         செப்டம்பர் 30, 2018 நிலவரப்படி, நிகர மாற்றி அமைக்கப்பட்ட நிலையான கடன்கள் (Net Restructured Standard Advances) சுமார் ரூ. 35 கோடியாக உள்ளது.

                         வங்கியின் கிளைகள் எண்ணிக்கை, 2018 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 328 ஆக அதிகரித்துள்ளது..

    செயல்பாடு குறித்து டிசிபி வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. முரளி எம். நடராஜன் (Mr. Murali M. Natrajan, Managing Director & CEO) கூறும்  போது, "வங்கியின் மேம்பாட்டு குறித்து நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம். சில்லறை கடன், எம்எஸ்எம்இ / எஸ்எம்இ மற்றும் வேளாண் கடன், அனைவருக்கும் வங்கிச் சேவை, தீவிர செலவு குறைப்பு நடவடிக்கை போன்றவற்றில் தொடர்ந்து சாதனை வளர்ச்சி கண்டு வருகிறோம். தற்போதைய நிலையில் வாராக் கடன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மூலதனத்தை சிறப்பாக பயன்படுத்தும் வழிகள் குறித்து நிலையாக ஆராய்ந்து வருகிறோம். செலவு வருமான விகிதம் மற்றும் பங்கு மூலதனம் மீதான வருமானம் படிப்படியாக அதிகரிக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்"




    ஐந்தொகை (Balance Sheet) முக்கிய விவரங்கள்




    ரூ. கோடியில்

    Sep 30,
    Jun 30,
    Mar 31,
    Dec 31,
    Sep 30,
    2018
    2018
    2018
    2017
    2017

    மொத்த சொத்துகள்
    32,510
    31,178
    30,222
    27,151
    25,908
    வைப்புகள்
    26,169
    25,032
    24,007
    21,296
    20,567
    நிகர கடன்கள்
    22,069
    21,243
    20,337
    18,595
    17,395
    முதலீடுகள்
    7,003
    7,053
    6,219
    5,714
    5,711
    பங்குதாரர்கள் மூலதனம்
    2,931
    2,854
    2,808
    2,743
    2,685
    மொத்த வாராக் கடன் விகிதம்
    1.84%
    1.86%
    1.79%
    1.89%
    1.80%
    நிகர வாராக் கடன் விகிதம்
    0.70%
    0.72%
    0.72%
    0.87%
    0.90%
    ஒதுக்கீட்டு விகிதம்
    76.82%
    76.09%
    75.72%
    73.36%
    71.96%
    காசா விகிதம்
    24.30%
    24.63%
    24.33%
    25.67%
    25.88%
    கடன் டெபாசிட் விகிதம்
    84.33%
    84.86%
    84.71%
    87.32%
    84.58%






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டிசிபி பேங்க், 2018-19 இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ.73 கோடி Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top