• Latest News

    Powered by Blogger.
    Saturday, 28 July 2018

    மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட், புதிய கடன் ஃபண்ட் மஹிந்திரா கிரெடிட் ரிஸ்க் யோஜனா அறிமுகம்.

    மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட், புதிய கடன் ஃபண்ட் மஹிந்திரா கிரெடிட் ரிஸ்க் யோஜனா அறிமுகம்.

    நியாயமான வருமானம் மற்றும்  மூலதன அதிகரிப்பை நடுத்தரம் மற்றும் நீண்ட காலத்தில் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்காக
    - நடுத்தரம் முதல் அதிக பாதுகாப்பு கொண்ட தரமான நிதி ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.

    -  இடர்ப்பாடு இடர் பாதுகாப்பு செயல்முறை அடிப்படையில் நிதி ஆவணங்களை, மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் ஆராய்ச்சி பிரிவு தேர்வு செய்யும்.

    புதிய ஃபண்ட் வெளியீடு ஜூலை 27, 2018 தொடங்கி ஆகஸ்ட் 10, 2018 நிறைவு
    பெறுகிறது.

    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (Mahindra and Mahindra Financial Services Limited -MMFSL)) -ன் முழுமையான துணை நிறுவனம் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட்  (Mahindra Mutual Fund). இது. மஹிந்திரா கிரெடிட் ரிஸ்க் யோஜனா (Mahindra Credit Risk Yojana) என்கிற புதிய கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இது நியாயமான வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கானது. இதன் மூலம் வருமானம் மற்றும் மூலதன ஆதாயத்தை நடுத்தரம் மற்றும் நீண்ட காலத்தில் எதிர்ப்பார்க்கலாம். இது எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்யும் மற்றும் யூனிட்களை விற்று பணமாக்கும் வசதியை கொண்ட ஓப்பன் எண்டெட் கடன் சார்ந்த திட்டம் (open ended debt scheme) ஆகும்.

    மஹிந்திரா கிரெடிட் ரிஸ்க் யோஜனா மூலம் திரட்டப்படும் நிதி பெரும்பாலும்   டபுள் ஏ (AA) மற்றும் அதற்கு குறைவான தரக்குறியீடு பெற்ற கார்ப்பரேட் பாண்ட் களில் முதலீடு செய்யப்படும். டபுள் ஏ பிளஸ் (AA+) கார்ப்பரேட் பாண்ட்களில் முதலீடு செய்யப்படாது.

    இந்த புதிய ஃபண்ட் வெளியீடு 2018, ஜூலை  17ஆம் தேதி தொடங்கி 2018 ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிறைவு பெறகிறது. இந்த ஃபண்ட் விற்பனை மற்றும் மறுமுதலீடு (sale and repurchase) முதலீட்டாளர்களுக்கு யூனிட் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து தினங்களுக்குள் ஆரம்பிக்கிறது.

    மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. அஷுடொஷ் பிஸ்னோய் (Mr Ashutosh Bishnoi, MD & CEO, Mahindra Mutual Fund) கூறும் போது.  ‘‘மஹிந்திரா கிரெடிட் ரிஸ்க் யோஜனா ஃபண்ட்-ல் முதலீடு செய்பவர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்கிறார்கள இந்த ஃபண்ட் வலிமையான கடன் போர்ட்ஃபோலியோவை கொண்டுள்ளது. இந்த முதலீட்டில் பணமாக்குவது எளிது. இந்த ஃபண்ட்  கவர்ச்சிகரமான நீண்ட கால முதலீட்டு வாய்ப்பாக இருக்கும். எனவே, நியாயமான வருமானம் மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயத்தை அளிக்கும்.”

    மஹிந்திரா கிரெடிட் ரிஸ்க் யோஜனா ஃபண்ட்-ல் திரட்டப்படும் நிதி நடுத்தரம் முதல் அதிக பாதுகாப்பு கொண்ட தரமான நிதி ஆவணங்களில் முதலீடு செய்யப்படும். குறைவான ஏற்ற இறக்கத்தில் (less volatility) நியாயமான வருமானம் அளிப்பதாக இருக்கும்.  இடர்ப்பாடு பாதுகாப்பு செயல்முறை (Risk Guard Process) அடிப்படையில் முதலீட்டுக்கான நிதி ஆவணங்களை, மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் ஆராய்ச்சி பிரிவு தேர்வு செய்கிறது

    மிதமான இடர்பாடை சந்திக்கும் திறன் கொண்ட, தங்களின் முதலீட்டுக் கலவை (portfolio), பரவலாக (diversify) இருக்க வேண்டும் என நினைக்கிற முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஃபண்ட் இது. வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற பாரம்பரிய முதலீடுகளுக்கு (traditional investment) மாற்று தேடுபவர்களுக்கு, இடர்பாட்டை ஈடுகட்டி நல்ல வருமானத்தை தருவதாக மஹிந்திரா கிரெடிட் ரிஸ்க் யோஜனா ஃபண்ட் இருக்கிறது. இந்தத் திட்டம் முதலீட்டில் பாதுகாப்பு, எளிதில் பணமாக்கும் வசதி (liquidity) மற்றும் வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்றதாகும்.

    இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியில் குறைந்தபட்சம் 65% AA மற்றும் அதற்கு குறைவான தரக்குறியீடு பெற்ற கார்ப்பரேட் பாண்டுகளில் (Corporate Bonds) முதலீடு செய்யப்படும். AA+ தரக்குறியீடு பெற்ற கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்யப்படாது. நிதிச் சந்தை ஆவணங்களில் (Money Market Instruments) திட்டத்தின் மொத்த நிகர சொத்தில் 30% வரைக்கும் முதலீடு செய்யப்படும். REITs & InvIT மூலம் வெளியிடப்பட்டுள்ள யூனிட்களில் 10 சதவிகிதம் வரைக்கும் முதலீடு செய்யப்படும். இப்படி முதலீடு செய்யப்படுவதால் வட்டி விகிதம் குறைந்தால், இந்த ஃபண்டில் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    (மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது, திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.)
    (Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.)

    மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் பற்றி

    மஹிந்திரா அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (Mahindra Asset Management Company Private Limited), என்பது கம்பெனிகள் சட்டம் 1956 படி ஆரம்பிக்கப்பட்டது. இது மஹிந்த்ரா மியூச்சுவல் ஃபண்ட்-ன் முதலீட்டு பிரிவு. மஹிந்த்ரா மியூச்சுவல் ஃபண்ட் என்பது  மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (Mahindra and Mahindra Financial Services Limited -MMFSL)) -ன் முழுமையான துணை நிறுவனம் ஆகும்.

    மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இந்தியா முழுவதும் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விநியோகித்து வருகிறது. கிராமப்புறம் மற்றும் சிறிய நகர்ப்புற பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
    சட்டப்பூர்வ விவரங்கள் : மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இந்திய டிரஸ்ட்கள் சட்டம், 1882 –ன் படி அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்பான்சர்: மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (ஸ்பான்சரின் பொறுப்பு ரூ. 1,00,000/-) அறங்காவலர் (Trustee): மஹிந்திரா டிரஸ்டீ கம்பெனி பிரைவேட் லிமிடெட். முதலீட்டு மேலாளர் (Investment Manager): மஹிந்திரா அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட். ஸ்பான்சர், டிரஸ்டி மற்றும் முதலீட்டு மேலாளர் நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

     மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட்
     மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (Mahindra & Mahindra Financial Services Limited (Mahindra Finance), என்பது இந்தியாவின் முன்னணி வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான (non-banking finance companies) மஹிந்திரா குழுமத்தின் (Mahindra Group) ஓர் அங்கமாகும். கிராமப்புறம் மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் கவனம் செலுத்தி வரும், மஹிந்திரா ஃபைனான்ஸ் 53 லட்சம் (5.3 Million) வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதோடு 849 கோடி டாலருக்கு (USD 8.49 Billion ) மேலான நிதிச் சொத்துகளை நிர்வகித்து வருகிறது..

    மஹிந்திரா ஃபைனான்ஸ், வாகனம் மற்றும் டிராக்டர் வாங்க நிதி உதவி அளிக்கும் முன்னணி நிறுவனம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிலையான வைப்புகளும் கடன்களும் வழங்குகிறது. இதற்கு நாடு முழுவதும் 1,284 அலுவலகங்கள் உள்ளன.

    இது, டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீட்டில் (Dow Jones Sustainability Index), வளர்ந்து வரும் சந்தைகள் பிரிவில் (Emerging Market Category) இடம் பிடிக்க போகும் இந்தியாவைச் சேர்ந்த ஒரே வங்கிச் சாரா நிதி நிறுவனமாக இருக்கும்.
    2018 ஆம் ஆண்டுக்கான, வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்கள் (BFSI) பிரிவில் பணிபுரிய மிகச் சிறந்த இடம் (Great Place to Work® Institute India) என்பதில் முதல் 15 இடங்களில் மஹிந்திரா ஃபைனான்ஸ் இடம் பெற்றுள்ளது. த எகனாமிக் டைம்ஸ் (The Economic Times) -ன் வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களில் சிறந்த பிராண்ட்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஏஆன் சிறந்த பணியாளர் 2017 (Aon Best Employer 2017) விருதும் கிடைத்திருக்கிறது.
    மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனத்தின், இன்சூரன்ஸ் தரகு துணை நிறுவனம், மஹிந்திரா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடெட் ( - Mahindra Insurance Brokers Limited MIBL) ஆகும். நேரடி மற்றும் மறுகாப்பீட்டு பரிமாற்ற சேவைகள் வழங்கும் உரிமம் பெற்றது.

    மஹிந்திரா ஃபைனான்ஸின் துணை நிறுவனம், மஹிந்திரா ரூரல் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Mahindra Rural Housing Finance Limited (MRHFL) ஆகும். நாட்டிலுள்ள கிராமப்புறம் மற்றும் சிறிய நகர்ப்புற பகுதிகளில் உள்ள தனிநபர்களுக்கு வீடு வாங்க, வீட்டை புதுப்பிக்க, வீடு கட்ட கடன் வழங்குகிறது.

    மஹிந்திரா ஃபைனான்ஸின் முழுமையான துணை நிறுவனம், மஹிந்திரா அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (Mahindra Asset Management Company Private Limited -MAMCPL) ஆகும். இது மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு மேலாளர் செயல்படுகிறது.

    மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனம், அமெரிக்காவில் மஹிந்திரா ஃபைனான்ஸ் யுஎஸ்ஏ எல்.எல்.சி (Mahindra Finance USA LLC) என்கிற பெயரில் செயல்படுகிறது. இது டிராக்டர் கடன் வழங்க, ரபோ வங்கியின் (Rabo Bank) துணை நிறுவனமான டி லாஜ் லான்டன் (De Lage Landen) உடன் இணைந்து செயல்படுகிறது.

    Visit us at:www.mahindrafinance.com

    மஹிந்திரா குழுமம் பற்றி

    மஹிந்திரா குழுமம், 2,070 கோடி டாலர் (USD 20.7 billion) மதிப்பை கொண்டது. இது கிராமப்புற வளர்ச்சி, சிறிய நகரங்களின் வளர்ச்சி, புதிய வணிகம் போன்றவற்றில் நாட்டு மக்களுக்கு உதவி வருகிறது. மேலும் பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், விடுமுறைக் கால இல்லங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. உற்பத்தி எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய டிராக்டர் நிறுவனமாகும்,
    வேளாண், வாகன உதிரிப் பாகங்கள், வர்த்தக வாகனங்கள், ஆலோசனை சேவைகள், எரி சக்தி, தொழில்சாலை கருவிகள், சரக்கு போக்குவரத்து, ரியல் எஸ்டேட், ஸ்டீல், விமானம், ராணுவம், இரு சக்கர வாகனம் என பல்துறை நிறுவனமாக உள்ளது. இந்தியாவை தலைமையிடமாக கொண்ட இந்தக் குழுமத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2.40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்,

    Learn more about Mahindra on www.mahindra.com / Twitter and Facebook: @MahindraRise
    Visit us at www.mahindra.com
    Media contact information:
    Metabelle Lobo Biren Shah,
    General Manager, Group Communications Senior Manager – Marketing
    Mahindra Group Mahindra Asset Management Company Pvt Ltd
    Contact: +91 9769212078 Contact: +91 9833076076
    Email: lobo.metabelle@mahindra.com Email: 3@mahindra.com"shah.biren3@mahindra.com



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட், புதிய கடன் ஃபண்ட் மஹிந்திரா கிரெடிட் ரிஸ்க் யோஜனா அறிமுகம். Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top