• Latest News

  Powered by Blogger.
  Saturday, 16 June 2018

  கட்டுப்படியாகும் விலையில் வீடுகள் - ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 சொகுசு அம்சங்களை வழங்கும் நவீன்ஸ்


   கட்டுப்படியாகும் விலையில் ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 சொகுசு அம்சங்களை வழங்கும் நவீன்ஸ்..!

  ஹோம் ஆட்டோமேஷன், தீயணைப்பு பீய்ச்சிகள், கடினமான கண்ணாடிகள், MIVAN கட்டமைப்பு போன்ற உலகத்தரத்திலான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருக்கும்
  சென்னை, 15 ஜுன், 2018: 

  25 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையின் மிகுந்த நம்பிக்கைக்கு உரிய கட்டுமான நிறுவனமாகத் திகழும் நவீன்ஸ் (Navin’s), கட்டுப்படியாகும் சொகுசிற்கானதொரு புதிய சேருமிடமாகத் திகழும் வகையில், பெரும் வளர்ச்சியை கண்டுவரும் மேடவாக்கத்தில், ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 என்னும் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதை இன்று அறிவித்துள்ளது. இப்பகுதியின் புதிய அடையாளமாகத் திகழும் வகையில், வேங்கைவாசலில் அமையவுள்ள இந்த ஸ்மார்ட் மினி-டவுன்ஷிப் திட்டம், வீடு வாங்குபவர்களுக்கு மேல்தட்டு நாகரீகம் மிக்க வாழ்க்கை முறையை வழங்கும் வகையில், சிறப்பான தொழில்நுட்பங்கள் மற்றும் உலகத்தரத்திலான வசதிகளோடு உருவாக்கப்படுகிறது. அனைத்தும் செலவுகளையும் உள்ளடக்கிய, கட்டுப்படியாகும் விலையில், 400–க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் ஹோம்களை இது கொண்டிருக்கும். இதில் காம்பேக்ட் 2BHK வீட்டின் விலை ரூ.34 லட்சத்தில் தொடங்குகிறது.

  சென்னையின் ரியால்டி சந்தையில் முதல் முறையாக, கட்டுப்படியாகும் வீடுகள் பிரிவில் ஒரு புரட்சியை படைக்கும் வகையில், ஸ்மார்ட்டான, பாதுகாப்பான, இடவசதியுள்ள மற்றும் அழகியல் அம்சங்கள் கொண்ட வீடுகளில் சொகுசான வாழ்க்கைமுறையை நவீன்ஸ் இதில் ஒருங்கிணைத்துள்ளது. அறிவார்ந்த தொழில்நுட்ப ஆற்றலுடன், பல்வேறு கிளிக் டு கண்ட்ரோல் வீட்டு வசதிகளைக் கொண்டுள்ள இத்திட்டம், ஒவ்வொரு வீட்டிலும், பயோமெட்ரிக் பின்கள், ஸ்மார்ட் ஃபோன் டோர் லாக்கிங், மின்விளக்கு மற்றும் மின்விசிறி கட்டுப்பாடு போன்ற ப்ரீமியம் வசதிகளையும், வைஃபை இணைப்பு வசதியையும் கொண்ட ஒரு சிறப்பான வளாகமாக இது அமையும். MIVAN தொழில்நுட்ப கட்டமைப்பு கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இதன் ஒவ்வொரு வீடும், ஈடுஇணையற்ற வலிமை, பாதுகாப்பு மற்றும் நீடிப்புத்தன்மையை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன்ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0, திறன்வாய்ந்த திட்டமிடலுடன், MIVAN தொழில்நுட்பத்தின் ஆதரவையும் பயன்படுத்தி, அதிக கார்ப்பெட் பகுதி கொண்ட இடவசதி மிக்க இல்லங்களை அளிக்கிறது.

  நவீன்ஸ் - மேலாண்மை இயக்குனர்,
   
  டாக்டர்.சு.குமார்  'சென்னை ரியல் எஸ்டேட் தொழில்துறையில் ஒரு புதிய வகையினத்தை உருவாக்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்', என்று நவீன்ஸ் - மேலாண்மை இயக்குனர், டாக்டர்.சு.குமார் கூறினார். 'கடந்த 28 ஆண்டுகளாக, வீடு வாங்குபவர்கள் மத்தியில் நவீன்ஸ் ஒரு உறுதியான நம்பிக்கை பிடிமானத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் தரத்திற்கான மறு பெயராகத் திகழ்கிறது. மொத்தத்தில் 35 லட்சம் சதுர அடிகள் பரப்பில் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களை நகரம் முழுவதும் வெற்றிகரமாக உருவாக்கி, குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கிய வரலாற்றை கொண்டிருக்கும் நாங்கள், சொகுசு அம்சங்கள் என்பதை மறுவரையறை செய்கிற ஒரு குடியிருப்பு அமைவிடத்தை உருவாக்கி அதனை எமது இல்லங்கை வாங்குபவர்களுக்காக பயன்பாட்டு அம்சத்தோடு ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டம் எங்களுக்கு இருந்தது. இன்று, எங்களது சமீபத்திய புரட்சிகரமான திட்டமாக ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 திகழ்கிறது மற்றும் பட்ஜெட் விலைகளில் வசதிகள் நிறைந்த சொகுசினை வழங்கும் வகையில் தொழில்துறையில் இது மாற்றங்களை உருவாக்கும் என்று நம்புகிறோம்' என்று அவர் மேலும் கூறினார்.

  இத்திட்டத்தில் உட்பட்டுள்ள பிற பிரீமியம் லைஃப்ஸ்டைல் வசதிகளில் குறிப்பிடத்தக்கவைகள் கட்டுமானத்தைச் சுற்றி அமைக்கப்படவுள்ள 40,000 சதுரஅடிகள் பரப்பளவிலான போடியம், லாங் வாக்கிங் டிரையல், கிரிட் சிஸ்டம் லைட்டிங் அரெஸ்டர், ஃபயர் ஸ்ப்ரிங்க்ளர்கள், அவசரநிலைகளில் ஸ்நார்கள் டிரைவ்வே மற்றும் குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்தும் கடினமான கண்ணாடிகள் ஆகியவைகள் ஆகும். மேலும் இத்திட்டம், பொது பகுதிகள் முழுவதற்கும் சென்ஸார் லைட்டிங் மற்றும் சூரிய மின்சக்தி வினியோகத்தையும் கொண்டுள்ளது. இது சென்னையின் முதல் முன்னமே-சான்றளிக்கப்பட்ட IGBC கோல்டு ரேட்டட் 'கிரீன் பில்டிங்' சான்றினைக் கொண்டுள்ளது இத்திட்டத்தின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


  இத்திட்டம், 2 BHK, 2.5 BHK மற்றும் 3 BHK வீடுகளைக் கொண்ட மூன்று பிளாக்குகளைக் கொண்டுள்ளது. இந்த குடியிருப்பு பிளாக்குகள், கிளப் ஹவுஸ் மற்றும் போடியம் ஆகியவற்றில் கட்டுமானப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 'பைன்' பிளாக் ஹவுசிங்கில் காம்பேக்ட் 2 BHK, 591 ச.அடி முதல் 601 ச.அடி வரையிலான பரப்பளவிலும், 'ரெட்வுட்' மற்றும் 'ஓக்' பிளாக்குகள் 2 BHK, 2.5 BHK மற்றும் 3 BHK வீடுகளை முறையே 1234 ச.அடி, 1371 ச.அடி மற்றும் 1469 ச.அடி மற்றும் 1484 ச.அடி பரப்பளவுகளிலும் அமைந்திருக்கும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு 044 6666 1111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது நவீன்ஸ் இணையதளம் http://navins.in/home-ல் லாகின் செய்யவும்.

  நவீன்'ஸ் குறித்து: 

  இல்லங்களை கட்டமைப்பது என்பது ஒரு கலை என்றும், நுண்ணறிவு, கவனமாக துல்லியம் மற்றும் பேரார்வம் கொண்ட ஒரு செயல்நடவடிக்கை என்றும் நவீன்'ஸ் நம்புகிறது. 1989ம் ஆண்டிலிருந்தே, கட்டடக்கலையின் உன்னதத்தை எட்டுவதும், அனைத்து திட்டங்களிலும் கொடுக்கும் நிலைக்கு மிக உயர்ந்த மதிப்பு கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்கிற நிகரற்ற தரம் என்பதே இந்நிறுவனத்தின் விருதுவாக்காக இருந்து வந்திருக்கிறது. சென்னை மாநகர் முழுவதிலும் அமைந்திருக்கும் இதன் 110-க்கும் கூடுதலான கட்டுமானத்திட்டங்கள், நவீன்'ஸ் என அழைக்கப்படும் உன்னதமான பேரார்வத்திற்கு சாட்சியங்களாக தலைநிமிர்ந்து நிற்கின்றன. சென்னையில் ISO 9001-2008 சான்றிதழைப் பெற்ற முதல் நிறுவனம் என்ற பெருமை இதற்கு உண்டு. 

  மக்களின் அதிக நம்பிக்கை பெற்ற கட்டுமான நிறுவனம் என்ற நற்பெயரை பெறுவதற்கான நீண்டகால கனவை நனவாக்குவதற்கான நீண்ட பயணத்தை பேரார்வத்துடன் நவீன்ஸ் மேற்கொண்டு வெற்றிகண்டிருக்கிறது. 

  தெளிவான உரிமை ஆவணங்கள், சிறப்பான அமைவிடங்கள், தரமான கட்டுமானப்பொருட்கள், நேர்த்தியான கட்டுமானம், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நடத்தல், வாடிக்கையாளர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்வதில் அக்கறை மற்றும் இவையனைத்திற்கும் மேலாக, அறநெறி சார்ந்த தொழில் நடைமுறைகள் ஆகியவற்றை நவீன்'ஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

  ஊடக தகவல்களுக்கு, தொடர்புகொள்க: திரு.ஸ்ரீனிவாசன், 9841109712


  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: கட்டுப்படியாகும் விலையில் வீடுகள் - ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 சொகுசு அம்சங்களை வழங்கும் நவீன்ஸ் Rating: 5 Reviewed By: S Chitra
  Scroll to Top