• Latest News

  Powered by Blogger.
  Sunday, 1 April 2018

  புது நிதி ஆண்டு: முதலீட்டை தொடங்க சரியான நேரம்..!

  புது நிதி  ஆண்டு: முதலீட்டை தொடங்க சரியான நேரம்..!

  சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், சென்னை மற்றும் புதுசசேரி  இன்று ஏப்ரல் 1, 2018 முதல், புதிய நிதி ஆண்டு 2018-19  தொடங்கவிருக்கிறது.

  இதுநாள்வரை நாம் சிலவற்றை சரியாகத் திட்டமிடத் தவறியிருப்போம். அடுத்ததாக, புதிய நிதி ஆண்டில் மத்திய அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் மாற்றங்களுக்கேற்ப நம்முடைய முதலீட்டில்  மாற்றங்கள்  செய்ய வேண்டியிருக்கும்.

  நிதி, முதலீட்டில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு நிதி ஆண்டுத் தொடக்கம்தான் ஒரிஜினல் புத்தாண்டு என்பதால் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த நிதி ஆண்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான நிதி ஆண்டாகவே இருக்கிறது.


  பங்குச் சந்தை சற்று இறக்கத்தில் இருப்பதால் முதலீட்டுக்கு சரியான காலமாகும். எனவே இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  2018-19 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி ஃபண்ட் மூலமான முதலீட்டில் நீண்ட கால மூலதன ஆதாய வரி கொண்டு வந்திருக்கிறார்கள். இதன்படி, நிதி ஆண்டில் நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ. 1 லட்சத்தை தாண்டும் போது, அதற்கு 10% வரி  கட்ட வேண்டும்.

  இதைக்கண்டு முதலீட்டாளர்கள் பயப்படத்தேவையில்லை. வருமான வரி என்பது நாட்டின் நலனுக்காக வசூலிக்கப்படுவது தான் என்றாலும், இதிலும் வரிச் சேமிப்பிற்கான வழிமுறைகள் இருக்கின்றன.

  வீட்டிலுள்ள ஒரே நபரின் பெயரில் முதலீடுகளைச் செய்யாமல், கணவன், மனைவி, பிள்ளைகளின் பெயரில் தனித்தனியாக கணக்கு தொடங்கி அதன் வழியாக முதலீடு செய்யலாம். இதனால், வருமானம் பிரித்தாளப்படுவதால் குறைந்த வரி கட்டுவதாகவோ அல்லது வரி முழுமையும் சேமிப்பாகவோ அமையும்.

  அல்லது ஒவ்வொரு நிதி ஆண்டு நிறைவிலும் வரிக்கு உட்படாத வருமானத்தை பங்குகளை, ஃபண்டுகளை விற்பது மூலம் எடுக்கலாம்.

  இன்னொரு பக்கம், இதன்மூலம் வீட்டிலுள்ள அனைவருக்கும் முதலீட்டின்மீதான விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம். எனவே மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த வரி விதிப்பையும் நேர்மறையாகப் பயன்படுத்தலாம்.

  வருமான வரித் திட்டல் செய்வதையும், அதற்கான வரிச் சேமிப்புக்கு செய்ய வேண்டிய முதலீட்டு முறைகளையும் நிதி ஆண்டு தொடக்கத்திலேயே திட்டமிட்டு செயல்பட்டால் இறுதிக் கட்டத்தில் எவ்வித பதட்டமுமின்றி செயல்படலாம்.

  பள்ளிக் கூட கட்டணம், இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுவதற்கான செலவுகளுக்கேற்ப தொடக்கத்திலேயே திட்டமிட்டு, லிக்விட் ஃபண்ட் போன்றவற்றில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வருவதன் மூலம், ஆண்டுக் கடைசியில் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  லிக்விட் ஃபண்ட் என்பதால் பங்குச் சந்தை நிலவரம் குறித்து அச்சப்படத் தேவையில்லை.

  எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அதற்குரிய ரசீதுகளைக் கேட்டுப்பெறவும். அவற்றை அந்த ஒரு வருடத்திற்கேனும் பத்திரப்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

  அவற்றில் மருத்துவச்சீட்டு, வீட்டு வாடகை ரசீது போன்றவற்றை வருமான வரிக் கழிவிற்குப் பயன்படுத்துவது போக மற்ற ரசீதுகளையும் சேமித்து வைப்பதன்மூலம், ஓராண்டில் நமக்கான செலவு எவ்வளவு தொகைக்கு இருந்திருக்கிறது என்பதை ஓரளவு தோராயமாகத் தெரிந்து கொள்ளலாம்.

  அதேபோல வாங்கும் ரசீதுகளில் ஜிஎஸ்டி குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

  வங்கிக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவைகளோடு ஆதாரை இணைப்பதில், அடுத்த அறிவிப்பு வரும்வரை ஆதாரைக் கட்டாயப்படுத்தக்கூடாதென்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும் இதுவரை ஆதார் எண் பெறாதவர்கள், கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்திலாவது ஆதார் எண் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.


  அடுத்து முக்கியமான ஒன்று, நம்முடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கு, ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்ட தகவல்களை மோசடி தொலைபேசி நபர்களை நம்பிக் கொடுத்துவிடக்கூடாது.

  சமீப காலமாக அத்தகைய மோசடிகள் மிகவும் நம்பும்படியாக பேசி நடக்கின்றன. எனவே, எந்தக் காரணத்தை முன்னிட்டும் "வங்கியிலிருந்து பேசுகிறேன்" எனக்கூறுபவர்களை நம்பி உங்களுடைய வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களைக் கொடுத்துவிடாதீர்கள். அப்படி யாரேனும் செல்பேசியில் அழைத்தால், அவர்களைப் பற்றிய விவரங்களை நீங்கள் கேட்டுப்பெறுங்கள். அதன்மூலம் அவர்கள் மோசடிப் பேர்வழிகளா என்பதை கண்டுபிடித்து விடலாம். இந்த 2018-19 நிதி ஆண்டு இனிதே அமையட்டும்.

  புதிய நிதி ஆண்டில் நிதி தொடர்பான உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறட்டும்!

  எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்,  புதுச்சேரி  S.BHARATHIDASAN  CEO, 


  WEALTH MANAGEMENT SOLUTIONS.


  s_bharathidasan@ Yahoo. Com  S.BHARATHIDASAN DECE,BA,FChFP.  CHARTERED FINANCIAL PLANNER  MOB; 94441 94869, 81223 56059
  CHENNAI ADDRESS: 

    
                          


   No.3 / 267C, IVth Cross                              Sengeni Amman Koil Street,                    


  Neelangarai, CHENNAI - 600 041.             


  Email id : s_bharathidasan@yahoo.com

  MOB; 94441 94869, 81223 56059.


  SRC; Naanayam 
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: புது நிதி ஆண்டு: முதலீட்டை தொடங்க சரியான நேரம்..! Rating: 5 Reviewed By: S Chitra
  Scroll to Top