• Latest News

    Powered by Blogger.
    Wednesday, 7 February 2018

    ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக தொடர்கிறது. ..!

    ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ஆர்பிஐ), பிப்ரவரி 7, 2018  நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் செய்யவில்லை. ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக தொடர்கிறது.

    கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதம் (சிபிஐ) 5.21% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் மிக அதிகம் என்கிற நிலையில்,  வட்டி விகித அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், பட்டியலிடப்பட்ட  பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் மீது நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% (ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு)  விதிப்பு மற்றும் சர்வதேச பிரச்னையால் சந்தை  இறக்கத்தில் ( கரெக்‌ஷன்ல்) இருப்பதால், வட்டி விகிதம் அதிகரிக்கப்படவில்லை.



    ஆர்பிஐ  நிதிக் கொள்கை  முடிவு 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக தொடர்கிறது. ..! Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top