• Latest News

    Powered by Blogger.
    Sunday, 28 January 2018

    வங்கிகளின் வாராக் கடன் ரூ. 9.5 லட்சம் கோடியாக உயரும்

    வங்கிகளின் வாராக் கடன் ரூ. 9.5 லட்சம் கோடியாக உயரும்

    தொழில் கூட்டமைப்பான அசோசம் மற்றும் தரக் குறியீடு நிறுவனமான க்ரிசில் இரண்டும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:

     வங்கிகளின் வாராக் கடன் 2017-18 ஆம் நிதி ஆண்டில் ரூ. 9.5 லட்சம் கோடியாக உயரும் என்று கூறியுள்ளன.

    வாராக் கடன் கடந்த 2016-17 ஆம் நிதி ஆண்டு இறுதியில் ரூ. 8 லட்சம் கோடியாக இருந்தது.

    கடன் வாங்கித் திரும்பச் செலுத்தாத நிறுவனங்களின் அடமான சொத்துகள், சொத்து மீட்பு அமைப்பிடம் உள்ளது. ஆனால், சொத்துகளை விற்று கடனைத் தீர்க்கும் செயல்பாடுகளில் நிர்வாகச் சிக்கல்கள் இருப்பதால் திட்டமிட்டப்படி வாராக் கடன்களைக் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வங்கிகளின் வாராக் கடன் குறைவதற்கு பதிலாக உயர்ந்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வங்கிகளின் வாராக் கடன் ரூ. 9.5 லட்சம் கோடியாக உயரும் Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top