• Latest News

    Powered by Blogger.
    Saturday, 23 December 2017

    யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் - அனைத்து காலத்துக்கும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட்

    யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட்
    அனைத்து காலத்துக்கும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட்


    யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் (UTI Dynamic Bond Fund) அனைத்து காலத்துக்கும் ஏற்ற  நெகிழ்ச்சி தன்மையுடன் கூடிய  ஒரு மியூச்சுவல் ஃபண்ட் .  இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவை (portfolio) வட்டி விகித ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 

    அதாவது, வட்டி விகிதம் (interest rate) அதிகரிக்கும் போது, இந்த ஃபண்டின்  முதலீட்டுக் கலவையில், முதலீட்டு ஆவணங்களின் முதிர்வு காலம் (Maturity) குறைக்கப்படும். 

    இதன் மூலம் மூலதனம் (capital) பாதுகாக்கப்படும். வட்டி விகிதம் குறையும் போது, ஒரு இன்கம் ஃபண்ட் (Income Fund) மூலம் கிடைக்கும் கவர்ச்சிகரமான வருமானம் இந்த ஃபண்டின் மூலம் கிடைப்பதாக இருக்கும்.


    திரு. அமன்தீப் சோப்ரா, ஹெட் - ஃபிக்ஸட் இன்கம், யூ.டிஐ ஏஎம்சி (Mr. Amandeep Chopra, Head of Fixed Income, UTI AMC) கூறும் போது,'' ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) அதன் அண்மை நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்ட்த்தில் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்காது என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஆர்பிஐ அதன் மொத்த மதிப்பு அதிகரிப்பு (Gross value added - GVA) வளர்ச்சி  கணிப்பின் அடிப்படையில் அதன் பணவீக்க மதிப்பீட்டை சற்று உயர்த்தி இருக்கிறது. இனி மொத்த மதிப்பு வளர்ச்சி மேம்படும் என நாங்கள் நம்புகிறோம். அதேநேரத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, வீட்டு வாடகைப்படி (HRA) தாக்கம் ஆகியவற்றால் பணவீக்கம் அதிகரிக்க கூடும். பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில் மேலும் வட்டி விகித குறைப்பு இருக்காது என நாங்கள் நம்புகிறோம். 

    இந்த நிலையில், வாய்ப்பை பயன்படுத்தி யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக இருக்கும்.

    முதலீட்டாளர் ஒருவரின் சமச்சீர் முதலீட்டுக் கலவையில் (balanced portfolio), கடன் சார்ந்த சொத்து பகிர்வின் (debt allocation) ஒரு  பகுதியாக  இந்தப் ஃபண்ட் இருக்கலாம். இந்த ஃபண்ட், அதன் பெஞ்ச்மார்க் ஆன கிரிசில் காம்போசிட் பாண்ட் ஃபண்ட் இண்டெக்ஸ் (CRISIL Composite Bond Fund Index) - ஐ விட அனைத்து கால கட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. 2017, அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, ஆரம்பம் முதல், இந்த ஃபண்ட் 8.55% வருமானம் கொடுத்துள்ளது. இதே கால கட்டத்தில், இதன் பெஞ்ச் மார்க் கொடுத்திருக்கும் வருமானம் 8.55% ஆக உள்ளது.



     




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் - அனைத்து காலத்துக்கும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் Rating: 5 Reviewed By: S Chitra
    Scroll to Top